← கவிதைகள் · poems

wrapped 2020

wrapped 2020

இந்த ஆண்டில், அதிகமாக நான் கேட்ட பாடல்கள், எவ்வளவு நேரம் மொத்தமாய் பாடல்களை கேட்டேன், எந்தெந்த கலைஞர்களின் பாடல்களை பலமுறை கேட்டிருக்கிறேன் போன்ற தகவல்களை கண் முன்னே அடுக்குகிறது ஸ்பாட்டிபை செயலி.

நீங்கள் இந்த ஆண்டில் இந்த நிற உள்ளாடைகளை அதிகம் உடுத்தியுள்ளீர்கள் இத்தனை முறை உங்கள் மறைவிட முடிகளை வெட்டியுள்ளீர்கள் என யாரவது சொல்வதை போல.

தனிமையை வேண்டி தனிமையில் தான் பாடல்களை கேட்கிறேன் தனியாக இல்லை என்பது சங்கடத்தை ஏற்படுத்துகிறது

-ஹக

the spotify app lays it all out before me — the songs i listened to most this year, how many hours in total, which artists i returned to again and again. as if someone were telling you — these are the colours of underwear you wore most this year, this is how many times you trimmed the hair in your hidden places. i listen to music in solitude, wanting solitude. knowing i am not alone makes me uncomfortable. — haka