← கவிதைகள் · poems

கொலை

murder

விஞ்ஞானத்தால் எதை வேண்டுமானாலும் நிகழ்த்திவிடலாமென நம்பிக்கொண்டிருந்த விஞ்ஞானி கண்ணன். அவனால் மீராவின் இழப்பை தாங்கிக்கொள்ள முடியவில்லை. அவளின் பிரேத பரிசோதனையில் தற்கொலையென பதிவாகியிருந்தது.

கால இயந்திரமொன்றை உருவாக்கி இயக்கினான். மீரா கட்டட முனையில் நின்றுக்கொண்டிருக்கிறாள். “மீரா வேண்டாம்..! குதித்திடாதே” என அலறிக்கொண்டே அவளை நோக்கி ஓடினான். ” ஹாய் கண்ணன்..போட்டோ எடுத்துக்கொண்டு-” பெய்த மழையால் தரை வழுவழுப்பாக இருந்தது. வழுக்கிக்கொண்டே சென்ற கண்ணன் மீராவை இடித்து விழுந்தான். மீராவும் விழுந்தாள் ஆனால் கீழே.

-ஹக

kannan was a scientist who believed science could make anything possible. he could not bear the loss of meera. the autopsy had recorded it as suicide. he built a time machine and set it in motion. meera is standing at the edge of the building. 'meera, don't — don't jump!' he screamed, running toward her. 'hey kannan, i'm just taking a photo... —' the rain had made the floor slippery. kannan slid and crashed into meera as he fell. meera fell too. but downward. — haka