← கவிதைகள் · poems

மன அமைதி

peace of mind

மன அமைதிக்காக யோகா செய்கிறார்கள் நடைப்பயிற்சி மேற்கொள்கிறார்கள் கடற்கரைக்கோ மலை பிரேதேசங்களுக்கோ பயணிக்கிறார்கள் ஆன்லைனில் சிறப்பு வகுப்புகளுக்கு ஆயிர கணக்கில் செலவு செய்கிறார்கள்

கண்களை மூடிக்கொண்டு பேரமைதி மேலிட இளஞ்சூட்டு வெயிலில் மல்லாக்க படுத்து சோம்பலை முறித்து இளைப்பாறும் நாயினது பாணி அனைவரையும் பொறாமைக்கொள்ளவே வைக்கிறது.

-ஹக

for peace of mind they do yoga, go on morning walks, travel to beaches and hill stations, spend thousands on special online classes. the dog lying on its back in the mild morning sun, eyes closed, stretching its laziness into rest — makes everyone want to be it. — haka