← கவிதைகள் · poems
உன்னை போன்ற மழை
a rain like you
அரை நிமிட மழை உன்னை போலவே இரக்கமற்றது. நனையலாமென கதவை திறந்து வெளியே போனால் காணாமல் போயிருக்கும், ஆசைக்காட்டி நின்றிருக்கும்.
ஏமாற்றத்துடன் திரும்ப மனமின்றி கேட்டில் தொங்கும் துளிகளை அள்ளி தலையில் தெளித்துக்கொள்வேன்.
ஏமாற்றத்தை விட ஏமற்றதை சமாதானம் செய்ய உபயோகிக்கும் பைத்தியக்காரத்தனமொன்றும் அவ்வளவு மோசமானதில்லை.
-ஹக
a half-minute rain —
merciless, just like you.
i open the door to step out and get drenched,
but it has already vanished,
having stood there just long enough to tempt.
unwilling to return disappointed,
i scoop the drops hanging from the gate
and sprinkle them over my head.
the madness of using some stupid thing
to make peace with the disappointment —
isn't so bad, really.
— haka