← கவிதைகள் · poems
கடைசி நிமிடம்
last minute
அவனது பிறந்த நாளுக்கு பன்னிரண்டு மணிக்கெல்லாம் வாழ்த்து தெரிவித்துவிட முனைப்பாயிருந்தேன் பதினொன்றுக்கே போர்வை போர்த்தி உறங்கிவிட்டேன்
பல வாரங்கள் முன்பே முன்பதிவு செய்து ஊருக்கு கிளம்பிய பின் கடைசி நிமிடத்தில் துணிகளை பையிலிருந்து எடுத்து அலமாரியிலே வைத்துவிடுகிறேன்
எலிவேட்டர் வரும் வரை காத்திருந்த நான் அது திறக்க பொறுக்கமாட்டாமல் படிக்கட்டுகளில் ஏற தொடங்கிவிடுகிறேன்
மாபெரும் வீண் காத்திருப்புகள் பலவற்றை வெகு தூரம் சுமந்து களைத்துவிட்ட எனக்கு சிறு காத்திருப்புகள் யானை கனம் கனக்கிறது சோர்வு தட்ட கடைசி நேரத்தில் என்னுடைய முடிவை நானே மாற்றிக்கொள்கிறேன்.
-ஹக
i was determined to wish him
by midnight on his birthday.
i fell asleep under the blanket by eleven.
weeks after booking in advance,
after setting out for home,
i take the clothes back out of the bag
at the last minute
and put them in the wardrobe.
i wait for the elevator,
then, unable to wait for it to open,
i start climbing the stairs.
i have carried so many enormous,
wasted waitings for so long —
i am exhausted.
even small waitings
weigh like an elephant.
tired, at the last moment,
i change my own mind.
— haka