← கவிதைகள் · poems

இன்னும் ஏதோ

still something

திறந்த கேட்டிற்குள் நுழைந்த மாடு பாதி பூச்செடியையே தின்கிறது தங்கமீன் இரண்டில் ஒன்று வாங்கிய தினத்திலே இறக்க மீதொன்று வெகு மாதங்களாய் உயிர்ப்புடன் சுறுசுறுப்பாய் நில்லாமல் நீந்துகிறது. பன்னிரண்டு மணிநேரம் உறங்கினாலும் சோர்வு விழி சுற்றி இருளடிக்கிறது எவ்வளவு மெலிந்தாலும் எலும்பை இழக்க வழிகள் தெரியவில்லை.

எல்லாவற்றையும் இழந்துவிட்டால் இழக்க ஒன்றுமில்லை, பெற எல்லாம் இருக்கிறதென என்னை நானே சமாதானம் செய்துகொள்வேன்
ஆனால் பிரச்னை இழக்க ஏதோவொன்று என்னிடம் இருந்துக்கொண்டே இருக்கிறது.

-ஹக

the cow that wandered in through the open gate ate only halfway through the flower plant. of the two goldfish i bought, the one died on the very day i brought it home — the other has been swimming for many months now, alive, restless, never still. even after twelve hours of sleep, exhaustion circles my eyes and darkens them. however much i thin away, i cannot find a way to lose the bones. when you've lost everything, there is nothing left to lose — everything is there to gain. i console myself with this. but the problem is, there is always something left in me to lose. — haka