← கவிதைகள் · poems
மாய வட்டங்கள்
phantom circles
ஹைக்கூ வாசிக்க கூட பொருமையில்லாதவவனை ஏன் யுகங்கள் காத்திருக்க செய்கிறாள் ? தேநீரை ஆவி பறக்க அருந்திவிட்டு நொடிமுன் அணைந்த தொடுதிரையை மீண்டும் உசுப்பி, அறிவிப்பு பலகையை இழுக்கிறான் அறிவிப்பொன்று வந்து சத்தம் கேட்காமல் போய்விடுமென சஞ்சலமடைகிறான்
போன குளிர்காலத்தில் கரைந்த நிலவு பின் வளரவேயில்லை பிறகு வந்தவையெல்லாம் அதன் சாயலில் தோன்றும் மாய வட்டங்கள்.
-ஹக
why does she make him wait ages —
a man who has no patience
even to read a haiku?
he drinks his tea while it's still steaming,
then wakes the screen that went dark a moment ago
and pulls down the notification bar —
anxious that a message might have arrived
without sound.
the moon that melted last winter
never grew back.
everything that came after
are only phantom circles
cast in its likeness.
— haka