← கவிதைகள் · poems
கடிகாரம்
the clock
இரவில் கடிகாரத்தால்
எங்கே போனாலும்
பத்து ரிக்டர் பூகம்பம்
ஒவ்வொரு அறையிலும்
சுத்தியலடிக்கும் இரைச்சல்
அடுத்த நொடிக்கு வந்துவிட்டாய்
அடுத்து என்ன செய்ய போகிறாய்
அதற்கடுத்து ?
குவாரியில் வெடித்து சிதறும்
பாறையென ஆகிவிடுகிறேன் நான்
சுவாரஸ்யமானவை சுவர்கள்
கடிகாரத்தையே தாங்கி நின்றாலும்
பிளவுப்படாமல்,
என்னை வியப்பில் ஆழ்த்துகின்றன
நானொரு சுவராக இருந்திருக்கலாம்
அடுத்ததுகள் இன்றி
இந்நொடியே கடலென நீள,
நீந்தி குதூகலித்திருந்திருப்பேன்.
-ஹக
wherever i go at night,
the clock brings a magnitude ten earthquake —
a hammer-blow of noise
in every room.
you've already arrived at the next moment.
what will you do after?
and after that?
i become a rock
blasted apart in a quarry.
walls are interesting things —
even holding up the clock,
they do not crack.
they fill me with wonder.
i could have been a wall —
with no afters,
this moment stretching like an ocean,
i would have swum through it with joy.
— haka