← கவிதைகள் · poems
தேநீர்
tea
எதிர்பார்த்து காத்திருக்காதீர்கள் குளிர் இரவில் தேநீர் வெப்பமிழக்க ஆகும் நேரம் தான் நம்மிடையே உள்ளது அன்பென்பது பெறுவதல்ல, தருதல். காணும் அனைத்தினுள்ளும் தன்னையே கண்டு சுயநலமாய் நேயம் செய்தல்.
தேநீர் வெப்பத்தில் தனியாய் குளிர் காய ஏதோ போலிருக்கிறது அருகே அமர்ந்துள்ளவர்களை நோக்கி என் கோப்பையை நகர்த்துகிறேன்.
-ஹக
don't sit waiting.
on a cold night,
all we have between us
is the time it takes for tea to go cold.
love is not receiving —
it is giving.
finding yourself in everything you see
and loving selfishly.
to warm myself alone
in the heat of tea
feels like something is missing.
i push my cup
toward the ones sitting near me.
— haka