← கவிதைகள் · poems

அருகே

near

உனதருகே அமர வேண்டும் போலிருக்கிறது அருகே என்பது இரண்டு வரிசை தள்ளியுள்ள நாற்காலியானாலும் பரவாயில்லை

உன்னுடன் இரண்டடிகள் சேர்ந்து நடந்துவிட வேண்டும் போலிருக்கிறது எறும்பின் கால் அளவிலானாலும் சரி

உனக்கு முத்தம் தரவேண்டும் போலிருக்கிறது தரையில் தவழும் உன் நிழலென்றாலும் எனக்கு தயக்கமில்லை

உன்னிடம் பேசவேண்டும் போலிருக்கிறது அவ்வறையில் நீயேயில்லை என்றாலும் எனக்கு சங்கடமில்லை

உனது புகைப்படம் எனக்கு அவசியம் தேவைப்படுகிறது அதில் நான் இல்லையென்றாலும் எனக்கு வருத்தமில்லை

உன் ஆடை முழுதும் எனக்கு பிடித்த நிறமாக இருக்கவேண்டிய நிர்பந்தமில்லை அதில் எனக்கு பிடித்த நிறம் பொட்டளவு இருப்பினும் சந்தோசப்படுவேன்

நான் எல்லாவற்றையும் உனக்காக எல்லைகளற்று சமரசம் செய்துவிட்டேன் பிரமாண்டமாக அகன்று விரிந்து வளரகூடிய எனது காதலை கூட வேர்களை அவ்வப்போது வெட்டி கிளைகளை கத்தரித்து பொன்சாயாகவே சிறுதொட்டியில் வளர்த்துவிட்டேன் உன்னிடம் எப்போதும் எதிர்பார்ப்பதெல்லாம் நாளுக்கொரு முறை இரண்டு ஸ்ப்ரேக்கள் மட்டுமே.

-ஹக

i want to sit near you — even if near means a chair two rows away. i want to walk two steps beside you — even if only the length of an ant's foot. i want to kiss you — even your shadow crawling on the floor would not make me hesitate. i want to talk to you — even if you are not in the room, i would not be uncomfortable. i need a photograph of you — even if i am not in it, i would have no regret. your clothes need not be entirely my favourite colour — even a dot of it would make me happy. i have compromised everything for you, without limit. even my love — which could have spread vast and wide — i have pruned at the roots, cut back the branches, and grown it as a bonsai in a small pot. all i ever expect from you is two sprays of water once a day. — haka