← கவிதைகள் · poems

தூண்டில்

the hook

ஒரு தூண்டிலை விட்டு நழுவிய மண்டூக மீன் சிறு இரைக்காக வேறொரு தூண்டிலில் சிக்கிக்கொள்கிறது

நான் இரைக்காக அல்ல தூண்டில் பிடித்து போய் சிக்கிக்கொள்கிறேன் பெரிய வித்தியாசமில்லை தான் ஆனால் என்னால் எந்த தூண்டிலென தீர்மானிக்க முடியும்.

-ஹக

a foolish-fish that slips off one hook gets caught on another for a small piece of bait. i get caught on hooks not for bait — but for the hook itself. not much of a difference, really. but at least i get to choose which hook. — haka