← கவிதைகள் · poems

திரும்புதல்

return

திரும்புதல்.

சாக போகிறேன் யாரும் தடுக்க வேண்டாமென சொல்லிவிட்டு பாதி தூரம் சென்றவன் பின்னால் யாரும் வரவில்லை இவ்வளவு தூரம் வந்த பின் பின்வாங்குதல் அவமானமென மனம் குமுறியது வீடு திரும்ப வேண்டுமென அறிவு கெஞ்சியது

பட்டுப்போன மரத்தின் உலுத்த கிளையில் தூக்கு கயிறை கட்டினான்.

-ஹக

he said he was going to die, told everyone not to stop him, and walked halfway there. no one came after him. having come this far, to turn back felt like shame — his heart raged. his mind begged him to go home. he tied the rope to a rotting branch of a dead tree. — haka