← கவிதைகள் · poems

வார்த்தைகள்

words

தினமும் யாரும் குட் மார்னிங் சொல்லவில்லையென்றாலும் காலை விடிய தான் போகிறது

தினமும் யாரும் குட் நைட் சொல்லவில்லையென்றாலும் இரவு மலர தான் போகிறது

இந்நாள் இனிய நாளாக அமையட்டுமென சொன்னாலும் சொல்லவில்லையென்றாலும் அதன் விருப்பதிற்கே நாள் அமைகிறது. பிசிறின்றி தனிச்சையாகவே எல்லாம் நடைப்பெற்றுக்கொண்டிருக்கிறது

இருந்தும் கற்பிதங்கள் செய்துக்கொண்டோம் ஒரு காலை விடிய ஓர் இரவு மலர ஓர் இனிய நாள் அமைய ஒரிரு வார்த்தைகள் வேண்டுமென்று.

-ஹக

even if no one says good morning, the morning still breaks. even if no one says good night, the night still blooms. whether or not someone says may this be a good day — the day unfolds as it pleases. everything happens on its own, without missing a beat. and yet we made up a story: that for a morning to break, a night to bloom, a good day to arrive — a word or two was needed. — haka