← கவிதைகள் · poems

ஈரம்

damp

ஈரம்.

தாழ்வார கம்பிகளில் காயவைத்திருந்த ஈர சட்டைகளை பற்களால் உருவி அதற்குள் படுத்துக்கொண்டது எனது நாய். வெளியிலிருக்கும் குளிருக்கு ஈர சட்டை எவ்வளவோ பரவாயில்லையென நினைத்திருக்கலாம். ஈர சட்டைகளுக்கு பதில் உலர்ந்த சட்டைகளை தந்தேன் அவற்றை பொருட்படுத்தவே இல்லை அது.

பயங்கரமாய் குளிர்கிறது அறைக்கு திரும்புகிறேன் தூக்கம் வழியும் கண்களோடு.. உலர்ந்த போர்வைக்குள் என்னை புதைக்கிறேன் அணைத்துக்கொள்ள ஈரமுடையவர்கள் யாருமற்று.

-ஹக

my dog pulled down the damp shirts hung to dry on the balcony railing with its teeth, and lay down inside them. it must have thought a wet shirt was still better than the cold outside. i offered it dry shirts instead. it paid them no attention. it is bitterly cold. i return to my room with sleep-heavy eyes, bury myself inside a dry blanket — no one damp(love) enough to hold me. — haka