← கவிதைகள் · poems
அங்குசம்
the goad
இந்த நொடியின் பிடியை உதறிவிட்டு வெகு தூரம் முன்னே சென்றுவிடுகிறேன் அல்லது பின்னே.
யானை வாங்கும் முன்னே அங்குசம் வாங்கி வருகிறேன் முன்பு மீன்களிருந்த குளத்தில் தூண்டிலிட்டு காத்திருக்கிறேன்.
-ஹக
i shake off the grip of this moment
and travel very far ahead —
or behind.
i buy the goad
before the elephant.
i cast a line
into the pond where fish used to be
and wait.
— haka