← கவிதைகள் · poems
நுரை மீசை
foam moustache
நீ ரோஸ்மில்க் அருந்திய பின் முளைத்த நுரை மீசையாய் அந்தி மாலையிலொரு மேகம் கண்டேன் அதை வருடி சுவைக்கும் நாவாய் அடர்சிவப்பு அலரி
ஏக்கமாய் பார்த்துக்கொண்டிருந்தேன்.. கண்டுக்கொண்ட வானம் தூறலிட்டு என்னுடன் பகிர்ந்துக்கொண்டது சில துளி.
-ஹக
i saw an evening cloud
like foam moustache after you drank rosemilk —
and a deep red sun
like your tongue reaching out to taste it.
i watched with longing.
the sky, noticing,
drizzled a little
and shared a few drops with me.
— haka