← கவிதைகள் · poems
விரிசல்
crack
விரிசல் விடுகிறது அச்சத்தில் அலறுவதா? மகிழ்ச்சியில் மிதப்பதா ? நான் கண்ணாடி தொட்டியில் நீந்தும் மீனா ? கூண்டிலிருக்கும் பறவையா ? குழப்பத்தில் தவிக்கிறேன் எதுவாகினும் இனி நான் இங்கே அடைபட்டிருக்க வேண்டியதில்லை என்பதால் நிம்மதி பெருமூச்சு விடுகிறேன்
-ஹக
a crack appears.
should i scream in fear?
or float in joy?
am i a fish
swimming in a glass tank?
a bird
caged?
i flounder in confusion.
whatever i am —
the relief is
that i no longer have to stay
trapped here.
— haka