← கவிதைகள் · poems

குழந்தையின் பொம்மை

the child's doll

மூலையில் நிராதரவாய் கிடக்கும் பொம்மையை எடுக்கும்போது அழுகையுடன் ஓடிவந்து “எந்து எந்து” என கையிலிருந்து பொம்மையை பிடுங்கும் குழந்தையை போல..

யாரேனும் என் கரங்களை பற்றும் போது அழ தொடங்கிவிடுகிறேன் என் உடலை நானே உதாசினப்படுத்தி ஒதுக்கிவைத்திருக்கும் பொழுதில் என் உடலை அணைக்கவோ பற்றவோ செய்கையில் எனக்கென் மேல் மீண்டும் பிடிப்பேற்பட்டுவிடுகிறது

கொஞ்ச நேரத்தில் மீண்டும் பொம்மை மூலையில் வீசப்படும் என்றபோதும்..

-ஹக

when i pick up the doll lying neglected in the corner, 'it's mine, mine' — a child came running and snatches the doll from my hands. whenever anyone takes my hands in theirs, i begin to cry. when i grow indifferent to my own body and push it aside — the moment someone holds or touches it, it is seized by me again. a little later, the doll will be thrown back into the corner. — haka