← கவிதைகள் · poems
நிரம்புதலும் மூழ்குதலும்
filling and drowning
நிரம்பி வழிகிறேன் நானே உள்ளுக்குள் மூழ்கிப் போகிறேன் சுடர்விட்டெரிகிறேன் நிழலை தோற்றுவித்து அதனுள் மறைந்துவிடுகிறேன் பறவையாகிறேன் மீனென எண்ணி இறகை ஒவ்வொன்றாய் கொத்தித் தின்று பசியாறுகிறேன்.
-ஹக
i overflow.
i sink deep inside myself.
i give off light.
i cast a shadow
and hide within it.
i become a bird.
thinking feather a fish,
i devour each feather one by one
and full myself.
— haka