← கவிதைகள் · poems

மலர் புன்னகை

a flower's smile

ஒரு மலரால் எவ்வளவு மிருதுவானதாக இருக்க முடியுமோ அத்தனை இயற்கையாக ஒரு புன்னகை எதிர்ப்பார்க்கிறேன் * என் நெஞ்சின் கனத்தை தாங்கிக்கொள்ளும் போது பிய்ந்திடாமல் நான் லேசானதாகிவிட்டதாக பொய்யாய் எனக்கு நம்பிக்கையூட்ட வேண்டும் * மற்றும் என்னை உங்கள் மலர் செடிகளுக்கு நீரூற்ற சொல்லாதீர்கள் மன்னிக்கவும் உங்கள் மலர் மட்டுமே எனக்கு தேவை அதை நீரூற்றி வளர்ப்பது உங்கள் பொறுப்பு.

-ஹக

i expect a smile as natural as a flower can possibly be soft. when it holds the weight of my chest without tearing — lie to me, that i have become lighter. and please, do not ask me to water your flower plants. forgive me — your flower alone is what i need. watering it and making it grow is your responsibility. — haka