← கவிதைகள் · poems
முள் வனம்
thorn forest
புரியாத கவிதைகளை மீண்டும் படித்துபார்க்க மாட்டேன் முற்களிருக்கும் பாதையை ஒரு முறை குத்தப்படாமல் கடந்துவிட்டு ஏன் குத்துப்படவில்லையென மீண்டும் அதில் பயணிப்பது முட்டாள் தனம் * புரிந்த கவிதைகளையும் மீண்டும் படிப்பது கிடையாது பாதங்களில் முற்களிறக்கி இரத்தம் கொண்ட பாதையை ஏன் நான் மீண்டும் தேர்ந்தெடுக்க வேண்டும்? * இம்முள் வனத்தில் ஒரு பூவை மட்டுமே தேடுகிறது சிறகுடைந்த பறவையொன்று
-ஹக
i will not go back to read
a poem i didn't understand.
having once crossed a thorny path
without being pricked —
to walk it again just to find out why
is foolishness.
i don't re-read poems i understood either.
why should i choose again
a path that drew blood from my feet?
in this thorn forest,
a bird with broken wings
searches only for a single flower.
— haka