← கவிதைகள் · poems

ஆமை

the tortoise

மனிதர்களை பார்த்து தற்கொலை பழகிக்கொண்ட ஆமையொன்றை ஆளரவமற்ற கடற்கரையோரம் காண்கிறேன் * தன் வாழ்நாள் முழுக்க யாருக்காகவோ காத்திருந்து களைத்திருக்க கூடும் அல்லது யாரிடமோ மன்னிப்பு வேண்டி கிட்டாமல் மன்றாடியே மணலில் தோல் உதிர்த்து கூடாகியிருக்கலாம் * ஓட்டின் பயன் இப்போது பாதுகாப்பிற்கில்லை உள்ளே அழுகிக் கொண்டிருப்பதை மறைக்கவே. * எப்போதாவது தேடப்பட்டவரோ மன்னிக்க தவறியவரோ அவ்விடத்திற்கு வருகை தந்தாரெனில் அதன் காத்திருப்பின் சாட்சியாகவும் அதன் கடைசி மன்னிப்பாகவும் ஓடொன்று அங்கேயிருக்கும்.

-ஹக

i find a tortoise on a deserted stretch of shore — one that has learned to commit suicide by watching humans. it may have spent its whole life waiting for someone and grown tired. or perhaps, begging for forgiveness that never came, it shed its skin into the sand and became a shell. the shell's purpose now is not protection — only to hide what is rotting inside. if ever the one it waited for, or the one who forgot to forgive, came to that place — a shell would be there as witness to its waiting, and its final forgiveness. — haka