← கவிதைகள் · poems

குளிர்க்காலம்

winter

குளிர்க்காலங்களில் எப்படி எழுதுவது? உணர்ச்சியற்று கிடக்கும் விரல்களால் எதை உணர்வது? எதை பனியென்பது? எதை கல்லென்பது? * இதயம் துடிப்பதை குறைத்துக்கொண்டு அதிகம் நடுங்க தொடங்கிவிட்டது சில நேரங்களில் உறைந்தும் போக கூடும். * அதனுளிருக்கும் வெற்றிடத்தை நிரப்ப என்னிடத்தில் தற்போது ஒன்றுமில்லை என்னை தவிற.

-ஹக

how to write in winter? what can these numb fingers feel? what is snow? what is stone? the heart has slowed its beat and begun to tremble more. sometimes it might freeze over entirely. to fill the emptiness inside it, i have nothing left except myself. — haka