← கவிதைகள் · poems
மீட்டல்
retrieval
இவ்வளவு நாளாய் இவ்வறையிலிருந்த பொருட்கள் இதுவரை இல்லாததைப்போலவே சந்தேகமெழுகிறது. * ஜன்னல் திறக்கிறேன் வெளிச்சத்தை விட நிழல் அதிகம் நுழைகிறது என் மீது ஊர்கிறது * மின்விசிறி மத்தியில் குவிக்கப்படும் பார்வை காற்றில் சிதறி நான்கு சுவற்றுக்குள்ளே சுற்றுகிறது. * மீண்டும் ஒரு பகலை பணையம் வைத்து தான் என்னை மீட்க வேண்டுமோ? முடிவேயில்லாமல் இழந்துவிட்டேன் என்னை இரவுடனான சூதாட்டத்தில்.
-ஹக
the things in this room
for all these days —
i begin to doubt
they were ever here.
i open the window.
more shadow than light enters.
it crawls over me.
gaze fixed on the center of the ceiling fan
scatters in the wind
and circles inside four walls.
must i mortgage another day
to reclaim myself?
i have lost myself endlessly
in a gamble with the night.
— haka