← கவிதைகள் · poems
நக பூச்சு
nail polish
புதிதாய் வைத்துக்கொண்ட நக பூச்சுக்கு என் கருத்தை கேட்கிறாய் புறாவொன்று சிறகுடைந்து விழுந்தததை சோகம் கவிந்த குரலில் தெளிவாய் விவரிக்கிறாய் உனக்கு பிடித்த நாயின் புகைப்படங்களை தொடுதிரை திணறும் வரை அனுப்புகிறாய் எம்மாதிரியான எவ்வண்ண கைப்பை வாங்கலாமென என்னிடம் ஆலோசிக்கிறாய் என்றோ எழுதிய கவிதைக்கு அர்த்தம் இதுவாவென வினாவுகிறாய் உன்னிடம் பேச ஆயிரம் இருக்கிறதா ? அல்ல நீ பேசுவதற்காகவே ஆயிரம் விடயம் நடக்கிறதா ?
பேசிக்கொண்டேயிரு என்னிடம் பேசயெதுவுமில்லை என்பதை நான் மறந்துபோகும் வரை. -ஹக
you ask my opinion on your new nail polish.
you describe in vivid, sorrow-tinged detail
how a pigeon fell with a broken wing.
you send photos of your favourite dog
until the screen struggles to load.
you ask me what kind of bag, what colour bag to buy.
you ask if this is what a poem you once read meant.
do you have a thousand things to say to me?
or does the universe create a thousand things
just so you can say them?
keep talking —
until i forget
that i have nothing to say.
— haka