← கவிதைகள் · poems

செவ்வக திரை

rectangular screen

அவ்வளவாக நண்பர்களிருந்ததில்லை செவ்வக திரையில் நொடிக்கு இருபது ஃப்ரேம்கலென நகரும் வரைந்த ஆயிர புள்ளி பிம்பத்தின் வெளிச்சம் நாளின் துக்கங்களை நாசூக்காய் துடைத்தெறியும், கற்பனை சித்திரங்கள் கை நீட்டி தன் உலகிற்கு அழைத்து செல்லும், உலகத்தை காப்பாற்ற மாய சக்திகளுடன் சாகசம் மேற்கொள்ளும் கதாபாத்திரம் என் சிநேகிதன் மனிதர்களைவிட மனிதர்களை போல் பேசும் மிருகங்கள் சுவாரஸ்யம் தந்தன பால்ய நினைவுகளென எததெயோ சொல்கிறார்கள் எனது பால்ய கால நினைவுகள் ஒரு செவ்வகம் தாண்டி எதுவுமில்லை. -ஹக

i never had many friends. the light of a thousand drawn dots moving at twenty frames a second on a rectangular screen would gently wipe away the day's sorrows. imaginary pictures reached out and pulled me into their world. a character that sets out on adventures with magical powers to save the world was my friend. animals that spoke more like humans than humans do gave me wonder. people has special somethings as childhood memories. my childhood memories don't go beyond a rectangle. — haka