← கவிதைகள் · poems

நாய்க்குட்டி பொம்மை

toy dog

சிறுவயதில் வைத்திருந்த பொம்மையொன்று ஞாபகத்திற்கு வருகிறது நாணயத்தை பொத்தான் மேல் வைத்தவுடன் கதவை திறந்தபடியே தாவிவரும் நாய்க்குட்டி நாணயத்தை காலால் பிடித்தவாறு உள்நகர்த்தி செல்லும்

நாணயங்கள் இல்லாதபோது வெறும் விரலை மட்டும் வைக்க மனமின்றி சிறு கல்லை வைப்பேன் கல்லையும் தயக்கமின்றி இழுத்துச் சென்று விடும்

நெஞ்சைஅழுத்தும் வெறுப்பையும் புறக்கணிப்பையும் அன்பென இதயம் எளிதில் நம்பிவிடுவதில்லையா அதை போலவே.

இந்த முறையேனும் நாணயமொன்று பொத்தானை அழுத்தாதா ென ஏங்குவதில்லை நாய்க்குட்டி மாறாக பொத்தானை அழுத்தும் அனைத்தையுமே நாணயமென நம்பிவிடுகிறது.

-ஹக

i remember a toy i had as a child — a puppy that would leap out the door the moment you placed a coin on the button, then drag the coin inside with its paw. when i had no coins, rather than placing just my finger, i'd put a small stone. it would drag the stone in just as willingly. doesn't the heart easily believe that crushing hatred and neglect is love? just like that. the puppy doesn't long for a real coin to press the button this time — instead, it believes that anything that presses the button is a coin. — haka