← கவிதைகள் · poems
நெருக்கம்
closeness
இதோ ஒரு பேக்கரியை நெருங்கிவிட்டோமென தெரியப்படுத்துகிறது கேக் வாசனை
இதோ ஒரு கடற்கரையை நெருங்கிவிட்டோமென தெரியப்படுத்துகிறது குளிர் காற்று
நெருங்கிவிட்டோமென தெரிந்துகொள்ள அடையாளங்கள் தேவைப்படுகிறது நெருக்கத்திற்கு சின்னங்கள் வேண்டியிருக்கிறது நெருக்கமானவர்கள் அதிகம் சிரிப்பார்கள் அதிகம் உரையாடுவார்கள் செல்ல பெயரோ பட்ட பெயரோ வைத்து அழைப்பார்கள் நெருக்கத்தின் இலக்கணம் சிக்கலற்றது
பிரிவின் இலக்கணமும் சிக்கலற்றதே அடையாளங்கள் மெல்ல மறைந்தால் தொலைவே வந்துவிட்டோமென மன நிம்மதி கொள்ளலலாம்
புறக்கணிப்பின் இலக்கணம் ஒரு சாண் கயிறில் ஆயிரம் முடுச்சுக்கள்; கடற்கரைக்கு சென்ற பின்னும் அனல் காற்றடிக்கிறதா? இல்லை, கடலே காணாமல் போய்விடுகிறது.
-ஹக
the smell of cake
tells you a bakery is near.
a cool breeze
tells you the shore is near.
to know we are close,
we need signs.
closeness needs symbols.
close ones laugh more,
talk more,
call you by pet names or nicknames.
the grammar of closeness is simple.
the grammar of distance is simple too —
when the signs slowly disappear,
you can find peace knowing
distance has arrived.
the grammar of neglect
is a thousand knots on a short rope;
even after reaching the shore,
does a hot wind still blow?
no — the sea itself has vanished.
— haka