தவறான புரிதல்
misunderstanding
[தவறான புரிதல்]
பெரும் மிருகமொன்று பதுங்கி பதுங்கி மெல்ல நடந்து வருகிறது உனது கையில் வாள் இருப்பதாலும் அது மிருகம் என்பதாலும் சிரத்தை கொய்து உன் வீரத்தை பறைசாற்றுகிறாய்
அதன் கையிலிருந்தது ராட்சச நகங்கள் இல்லை மென்மையான சின்னஞ்சிறிய பூக்கள்; பதுங்கியது எதிர்பாராத சமயம் பறித்த பூக்களை தந்து உன்னை வியப்படைய செய்ய, தாக்குவதற்கு அல்ல
துரோகம் இழைத்தவர்கள் மறுபடியும் துரோக தழலால் வாட்ட தானே போகிறார்கள் ? அழ வைத்தவர்கள் மறுபடியும் கண்ணீர் கடலில் அமிழ்த்த தானே போகிறார்கள் ? நேற்றை போலவே தானே இன்றும் நடக்க போகிறதென வரையறுத்துவிடுகிறோம் அவர்கள் மன்னிப்பு கேட்பார்கள் வந்து அரவணைப்பார்களென கொஞ்சமும் மனம் நம்புவதில்லை தவறான புரிதலில் தீர்க்கமான முடிவுகளெடுத்துவிடுகிறோம்
இதுவே காரணமாகிவிடுகிறது மனிதன் மிருகமாவதற்கும் மிருகம் மிருகமாகவே இருப்பதற்கும்.. -ஹக