← கவிதைகள் · poems

வாழ்வதற்கு காரணம்

reason to live

வாழ்வதற்கு முக்கிய காரணங்கள் தேவையில்லை எதை வேண்டுமானாலும் காரணமாக்கிக்கொள்ளலாம்

தினசரி அருந்தும் ஒரு தேநீருக்காக அடுத்து வரவிருக்கும் திரைபடங்களை பார்ப்பதற்காக கடுங்குளிரில் போர்வையின் இதமான அணைப்பிற்காக ஆச்சரியமூட்டும் கவிதைகளை படிப்பதற்காக

புதிதாயொரு பாடலை கேட்கிறாய் உனக்கு அதீதமாய் பிடிக்கவிருக்கும் வரி இனிமேல் தான் வரவிருக்கிறது காத்திரு, சலிப்பூட்டும் வரிகளை கடந்து. -ஹக

you don't need important reasons to live. anything can become a reason. for the one cup of tea drunk each day. for the films yet to come. for the warm embrace of a blanket in bitter cold. for the poems that leave you astonished. you're listening to a new song — the line you'll love most hasn't arrived yet. wait. cross the boring lines first. — haka