← கவிதைகள் · poems

தடயங்கள்

traces

திடீரென என்றோ ஒரு நாளில் நடந்த தருணத்தை நினைவுப்படுத்துகிறாய் நினைவு கூர்தலுக்கு பிடிக்கும் கொஞ்ச நேரத்திற்கு பொறுக்கமாட்டாமல் “அதற்குள் மறந்துவிட்டாயா ?” என்கிறாய் மறந்துவிட்டேன் என்பதை சொல்ல தயங்கி ஞாபகமிருக்கிறது என்கிறேன் அன்று கூடயிருந்த யாரோ ஒருவரின் நாய்க்குட்டி இறந்துவிட்டதென்கிறாய் “அய்யோ..அழகாயிருந்ததே..” நாய்க்குட்டி மட்டுமே ஞாபகமிருந்தது எனக்கு.

ஒருவரை நினைவில் வைத்துக்கொள்ள சில தடயங்களை மட்டுமே விட்டுச் செல்கிறார் அந்த தடயங்களும் அழியும் போது அவரை நினைவில் வைத்துக்கொள்ள முடியாமல் திணறுகிறோம் அவர் தூர தொலைந்து விடுகிறார்

கவலைப்படாதே அன்பே, உனக்காகவே என் பாதங்கள் மண்ணில் ஆழ பதித்து நடக்கின்றன.. -ஹக

suddenly you remind me of a moment from some day long ago. unable to wait even the small time it takes memory to stir — 'have you already forgotten?' you ask. hesitant to say i have, i say i remember. you mention that the puppy belonging to someone who was there that day has died. 'oh, it was so sweet...' the puppy was all i remembered. to be remembered, people leave behind only a few traces. when those traces fade too, we struggle to hold them in memory — they drift far away. don't worry, my love. just for you, my feet press deep into the earth with every step i take. — haka