← கவிதைகள் · poems

கடைசி

last

இது தான் இந்த நாளின் கடைசி நிமிடம் என்கிறாய் இது தான் இந்த மாதத்தின் கடைசி நாள் என்கிறாய் இது தான் இந்த வருடத்தின் கடைசி வாரம் என்கிறாய் நீ “கடைசி” என சொல்வது கடைசியை குறிப்பதற்கு அல்ல புதிதாயொரு நாள் புதிதாயொரு வாரம் புதிதாயொரு வருடம் நோக்கி நகரவிருக்கிறோம் என்பதை உணர்த்த.

எதை நோக்கியும் நகர விருப்பமில்லை எனக்கு இதோ ஆணியில் அறையப்பட்டிருக்கும் நாட்காட்டி அடுத்த ஆண்டும் இங்கேயே தான் கிடக்க போகிறது.

ஆனாலும் கடைசி வரை வந்துவிட்டோமென சின்ன சந்தோசம் இல்லாமல் இல்லை.

-ஹக

you say this is the last minute of this day. you say this is the last day of this month. you say this is the last week of this year. when you say 'last' — you don't mean the end. you mean we are moving toward a new day, a new week, a new year. i have no desire to move toward anything. this calendar nailed to the wall will stay right here next year too. and yet — there is a small joy in knowing we made it to the last. — haka