← கவிதைகள் · poems

ஆசை துடுப்பு

the paddle of desire

ஆசை துடுப்பு.

படகோட்ட துடுப்புகள் அவசியமென்றனர் பல துடுப்புகளை அள்ளி வைத்துக்கொண்டேன் கடலில் இருபத்தியொரு மைல் வந்த பிறகே உற்று கவனித்தேன் என்னால் இயக்கப்பட வேண்டிய துடுப்புகள் தானாகவே தன் போக்கில் இயங்க தொடங்கியிருந்தன

ஒவ்வொரு துடுப்பும் படகை ஒவ்வொரு திசையில் இழுத்து செல்ல என் வழியை தவறவிட்டு வெகு தூரம் வந்திருந்தேன் திசையை தீர்மானிக்க தொடங்கியதிலிருந்து துடுப்பிற்கு நான் வெறும் துடுப்பு மட்டுமே என்றான பின் மீண்டும் துடுப்பின் கட்டுப்பாட்டை எடுத்துக்கொள்ள முடியாத தருவாயில் அவற்றை கடலில் தூர தூக்கி வீசினேன்

துடுப்புகளின் சுமை குறைந்ததும் படகு தூரிகையாக படகின் போக்கு எழில்மிகு ஓவியமாகிறது நான் வண்ணங்கள் ஆகிறேன்.

-ஹக

they said paddles were necessary to row a boat. i gathered many paddles and set out. it was only twenty-one miles into the sea that i noticed: the paddles i was meant to control had begun to move on their own. each paddle pulling the boat in its own direction, i had drifted far off course. from the moment they started deciding direction, to the paddles i was merely a paddle. before i could reclaim control, i flung them far into the sea. with the weight of the paddles gone, the boat becomes a brush — the boat's path becomes a beautiful painting. i become the colours. — haka