← கவிதைகள் · poems

எச்சரிக்கைகள்

warnings

எச்சரிக்கைகள்.

துருப்பிடித்த கதவுகள் திறக்க முரண்டு பிடிப்பதில்லை மாறாக சிந்திக்க சிறு கால அவகாசம் அருளுகிறது மூடிய படியே விட்டுவிட சந்தர்ப்பம் தருகிறது திறக்க தான் போகிறோமென தீர்மானித்த பின் கடைசியாக “நிச்சயம் நீ நுழையா தான் வேண்டுமா?” வென க்ரீச்சொலியில் எச்சரிக்கை விடுக்கிறது

பேய் படங்களில் பேய்களை விட கதவுகளின் க்ரீச்சொலி குலைநடுங்க செய்வதில்லையா? உண்மையான ஆபத்தை விட எச்சரிக்கைகள் நம்மை அதிகம் பயமுறுத்துகிறது கண்களை விரல்களால் மூடி பின்வாங்க வற்புறுத்துகிறது..

-ஹக

rusted doors do not resist opening. instead, they offer a small moment to think — a chance to leave them closed. once you have decided to open, they give one last warning — a creak that asks: 'are you sure you really need to go in?' in horror films, isn't it the creak of the door rather than the ghost itself that makes you tremble? warnings frighten us more than actual danger — forcing our fingers over our eyes, pushing us to retreat. — haka