← கவிதைகள் · poems
மாற்றி அனுப்பப்பட்ட பிரியம்
misdirected love
“ஹலோ செல்லம்” சிலிர்த்து போகிறேன் நேற்றிரவு வரை வசவு பாடியவனிடமிருந்து திடீரென இவ்வளவு பிரியம் என் மேல் எப்படி பொத்துக்கொண்டு பொழிகிறதென்பதை பார்க்கையில்.. பிறகு குறுஞ்செய்தியை நாணத்தால் அழித்து விட்டு சமாளிக்கிறான் காதலிக்கு அனுப்ப வேண்டிய குறுஞ்சசெய்தியை மாற்றி எனக்கு அனுப்பியிருக்கிறான் என்பதை புரிந்துக்கொண்டேன் .
அன்பிற்கேங்கும் இதயம் மாற்றி அனுப்பப்படும் பிரியங்கள் உண்மையில் யாருக்கானது என்பதை ஆராய விரும்புவதில்லை தனக்கானது தானென முடிவுக்கு வந்துவிடுகிறது தனக்கானதல்ல என அறிந்த பின்னும் “மாற்றி அனுப்பப்படுவதால் அவை பிரியமில்லை என்றாகிவிடுமா ?” என பைத்தியக்கார தனமாய் கேள்வி எழுப்புகிறது.
-ஹக
'hello, darling.'
i shiver.
seeing so much sudden affection
pour down on me
from someone who was cursing me
just last night.
then he deletes the message in embarrassment
and recovers.
i realise he sent me the message
he meant for his girlfriend.
a heart that thirsts for love
doesn't want to examine
who a misdirected affection was really meant for.
it decides it was meant for itself.
even after knowing it wasn't,
it madly asks —
'does being misdirected
make it any less love?'
— haka