← கவிதைகள் · poems

திரை

the screen

காலையில் மூத்திரம் பெய்வதற்கு முன்போ சிலர், மூத்திரம் பெய்துக்கொண்டிருக்கும் போதே கூட திரையை தேய்க்க தொடங்கிவிடுகிறார்கள் டிங்கென்ற ஒலி செவியை தொடுமுன்னே விரல் திரையை உரசலாகிறது எல்எஸ்டி எடுத்துக்கொண்டது போல கருவிழி அகலமாகிறது.

சூது விளையாட்டு.. ஒருவனின் பதிலுக்காக, ஒருத்தியின் பதிலுக்காக ஓராயிரம் முறை அறிவிப்பு பலகை இழுக்கப்பட்டு சோதிக்கப்படுகிறது.

தங்களது பேரன்புமிக்கவரின் கரங்களை பிடித்தே நடப்பது போல திறன்பேசியை முப்பொழுதும் உள்ளங்கையால் அணைத்துக்கொள்கிறார்கள் திரை தரும் சிறு ஆர்காஸத்திற்காக நாள் முழுக்க திரை அவர்களின் மூளையை புணர்ந்துகொண்டே இருக்க சம்மதிக்கிறார்கள்.

நாள் நெடுக புகைப்படங்களுக்கு இதயங்கள் அளித்துவிட்டு நாளின் முடிவில் அவர்களுக்கென கொஞ்சமும் இதயம் மிஞ்சுவதில்லை மிஞ்சிய இதயத்திற்கும் அவர்களை பிடிப்பதில்லை.

-ஹக

some people start scrolling the screen before they even urinate in the morning — or while they're urinating. before the notification sound reaches the ear, the finger is already grazing the screen. the pupils dilate like someone on lsd. a gambling game — for one person's reply, for another's, the notification bar is pulled down a thousand times and checked. they hold the phone in their palm all day the way you'd hold the hand of someone dearest. for the small orgasm the screen offers, they consent to let it fuck their brain all day long. all day long, they give their hearts to photographs. by the end of the day, not a sliver of heart is left for themselves. and what's left doesn't even want them. — haka