← கவிதைகள் · poems
பிசிறு வெளிச்சம்
lingering light
ஒளி மங்கும் மாலையின் விளிம்பில் ஒட்டிக்கொண்டிருக்கும் பிசிறு வெளிச்சமே..! பிரியாதே..! கண் தெரியா இருளில் பிரளயங்களை பிரம்மையென புறம்தள்ளிவிடாதோ பித்து மனம் ? வீடு திரும்புவோர்கள் நிழலெது நிஜமெது என்றறியாமல் நிழலை வீடென நினைத்து உட்புகுந்துவிடமாட்டனரோ ? பறவைகள் கூடடைந்து விட்டன கட்டிடங்கள் கண் விழித்து பார்க்கின்றன களைப்புற்ற மனங்கள் மது அருந்துகின்றன கவலையுற்ற இதயங்கள் மாடியிலிருந்து பறக்கின்றன காதலின் கடிகாரத்திலிருந்து முற்கள் உடைந்து விழுகின்றன புன்னகைகள் அழுகைகளாக உருமாற்றம் அடைகின்றன ஒற்றை நிலவின் வெளிச்சம் யாருக்கும் போதவில்லை ஒவ்வொருவருக்கும் நூறு கோடி நிலவு வேண்டும் நூறு கோடி நிலவு வேண்டும்.
-ஹக
o lingering light
clinging to the edge of the dimming evening —
do not leave.
in the sightless dark,
will the restless mind not cast away catastrophes
as illusions?
will those returning home
not mistake shadow for shelter
and walk inside?
birds have gone to their nests.
buildings open their eyes and watch.
tired minds drink.
anxious hearts fly from rooftops.
the thorns of love's clock
break and fall.
smiles transform into weeping.
one moon's light is not enough for anyone.
each one needs
a hundred crore moons.
a hundred crore moons.
— haka