← கவிதைகள் · poems

மழையின் அங்கீகாரம்

the rain's recognition

இரண்டு வார்த்தை பேசாத மறு புன்னகை கூட செய்யாத நான் பக்கத்தில் இல்லாததை போலவே என்னருகே அமர்ந்து வந்த சக பயணியிடமிருந்து விடைபெற்று வீடு திரும்புகிறேன்.

சோவென பொத்துக் கொண்டு ஊற்றி வாரி அணைக்கும் மழை நான் இங்கே தான் உள்ளேன் தொலையவில்லையென என் இருப்பிற்கு பெரும் அங்கீகாரம் வழங்குகிறது.

உங்களிடம் மழையை எதிர்பார்க்கவில்லை சிறு துளியை மட்டும் தான் எதிர் நோக்குகிறேன் அதையே பல கூறு போட்டு மழையாக்கி கொள்வதொன்றும் எனக்கு புதிதல்ல.

-ஹக

i return home having said goodbye to the fellow traveler who sat beside me the whole journey — not two words exchanged, not even a smile returned, as though i wasn't there at all. the rain pours down in one sudden rush, wrapping everything in its arms — and grants my existence a great recognition: i am here, i have not disappeared. i don't expect rain from you. only a single drop. turning that one drop into a rain of my own is nothing new to me. — haka