← கவிதைகள் · poems

புத்தாடைகள்

new clothes

புத்தாடைகள்

செருப்பிலிருந்து சேறு காற்சட்டை மேல் வாரியடித்துவிடுமென மெதுவாய் நடக்கிறேன் சட்டையில் எண்ணெய் கறைகள் பட்டுவிடுமென
மிக கவனமாய் இனிப்புகள் பலகாரங்கள் உண்கிறேன் ஆடை கசங்கிவிடுமென புத்தாடைகளுடன் படுக்கையில் உறங்குவதில்லை புதிதாய் அறிமுகமாகும் ஒருத்தரை
நாசூக்காய் எப்படி நடத்துவீர்களோ அது போல.

லேபில் கூட பிய்க்கப்படாத புத்தாடைகள் பை நிரம்ப கிடக்கிறது மேல் சொன்ன காரணத்திற்காக அவற்றை உடுத்த மனமில்லை எனக்கு புதிய ஆடைகளின் வருகையால் பழைய ஆடைகளின் மேலான விருப்பம் இன்னும் கூட மட்டுமே செய்கிறது அவை என் சுதந்திரத்தை பறிக்காமல் கூடுதல் பாதுகாப்பு உணர்வூட்டும் என் தோலாகவே மாறிவிடுவதால்.

புத்தாடைகள் நன்றாய் பழக்கப்பட மாதங்கள் ஆகிவிடுகின்றன அதற்குள் பழைய ஆடைகள் என்னுடன் நெருங்கி பழகி கிழிந்துவிடுகின்றன.

-ஹக

i walk slowly so the mud won't splash off my sandals onto my trousers. i eat sweets and snacks very carefully so the shirt won't stain with oil. i don't sleep in new clothes so they won't crease. just like how you'd treat a person you've just met — carefully. new clothes with the labels still on fill the bag. for the reason above, i have no desire to wear them. the arrival of new clothes only makes me love the old ones more — they have become my skin, giving extra comfort without taking my freedom. new clothes take months to feel worn in. by then, the old ones have grown close to me and torn apart. — haka