← கவிதைகள் · poems

பக்கத்து அறை

the next room

தனிமை படுத்திருக்கு.

என்னை தூங்க விட மறுக்கிறது இந்த தலையணை மேல் துயிலும் தனிமை படுக்கை மொத்ததையும் தனதாக்கிக்கொண்டு உருண்டு பிரள்கிறது.

அதற்கென ஒரு ஓரம் ஒதுக்கியிருந்தேன் இப்போது அது பெருத்துவிட்டதால் அதை குறை சொல்ல இயலாது அருகே நாற்காலியில் அமர்ந்து அதை வெறுச்சோடி பார்க்கலானேன்.

என்னுடன் நன்கு பழகிவிட்டதால் எழுப்ப மனமில்லை ஆனால் அதற்கு வெட்கம் அதிகம் என்னை தவிர வேறு யாரெனும் அருகே படுத்தால் அது பக்கத்து அறைக்கு சென்றுவிடும். கதவை திறந்துக்கொண்டு யாரேனும் “என் படுக்கையிலும் தனிமை படுத்துக்கொண்டது உன் படுக்கையில் படுத்துக்கொள்ளாமா ?”என கேட்க காத்திருக்கிறேன்.

பிரச்சனை என்னவெனில் கதவையே பார்த்து காத்திருக்க மட்டுமே செய்கிறோம் எல்லோரும்.. பக்கத்து அறையின் கதவை தட்ட மனமில்லாமல்.

-ஹக

loneliness is lying down. it refuses to let me sleep. it rolls and sprawls across the entire bed, making it all its own — this loneliness that dozes on my pillow. i had set aside a corner for it. but now that it has grown so large, i cannot blame it. i moved to the chair beside the bed and sat watching it, hollow-eyed. we know each other too well now — i don't have the heart to wake it. but it is so shy: if anyone else were to lie down near me, it would slip away to the next room. i am waiting for someone to open the door and ask — 'loneliness came and lay down in my bed too. can i come lie down in yours?' the issue is, all of us are only ever waiting, watching the door — none of us willing to knock on the one next to us. — haka