← கவிதைகள் · poems
வெகு தூர கடைக்கு செல்ல
to go to faraway shop
வெகு தூரமென்பது சிறு தூரங்களின் கோர்வையென்பதால் சிறிது சிறிதாய் வெகு தூரத்தை கடக்க சிறு தூர வழித்துணைகளை எதிர்ப்பார்க்கிறேன்.
முகம் பார்த்து கூடவே வரும் இளம்பழுப்பு நாய் கால் பட்டு முன்னே செல்லும் சிறு கல் காற்றடித்து பின்னே தொடரும் நெகிழி காகிதம் மற்றும் காற்சட்டை பையிலுள்ள கைபேசியை அதிர்விக்கும் உனது குறுஞ்செய்திகள்.
-ஹக
i must go to a very distant shop.
a great distance, after all,
is only small distances stringed together —
so i look for small companions
to help me cross it, bit by bit.
the tawny dog who catches my eye
and falls into step beside me.
the pebble that rolls ahead
at the nudge of my foot.
the plastic sheet that rustles
and trails behind me in the wind.
and your buzzing texts
through the fabric
of my trouser pocket.
- haka