← கவிதைகள் · poems

தொலைதூர பிரதேசம்

a distant place

தொலைதூர பிரதேசமான தூக்கமடைய பிரயாணிக்க தொடங்குகிறேன் ஏனோ நானும் அதுவும் ஒரே துருவ காந்த முனைகளாகிவிடுகிறோம்

சம்மந்தமற்ற எண்ணங்களின் சாமர காற்று விழிப்பை உறுதிப்படுத்தி அளிக்கிறது சான்றிதழ்

போர்வை கரிசனை காட்டும் காதலியாகி தழுவிக்கொள்ள தலைத்தெறித்தோடுகிறது தவழ்ந்த நேரம்

இரவு முழுதும் பயணித்தும் தொடங்கிய புள்ளியிலே நிற்கும் குழப்பம் மட்டுமே அன்றாட காலை வணக்கமாகி எழுப்புகிறது புன்னகைத்து. -ஹக

i set out to travel to the distant place called sleep. somehow, it and i have become the same pole of a magnet. the fan-wind of unrelated thoughts certifies my wakefulness with a stamp. the blanket becomes an affectionate lover, running headlong to embrace me — for the brief moment i drift. having traveled all night and arriving at the very point i started, only confusion smiles and wakes me as its daily morning greeting. — haka