← கவிதைகள் · poems
மீனாக இருந்துவிடுகிறேன்
i want to be a fish
மீனாக இருந்துவிடுகிறேன் யாருக்கும் தெரியாமல் அடியாழத்தில் நீந்தியபடி தொட்டில் மீனென்றாலும் பரவாயில்லை அவ்வீட்டில் யாரும் கண்டுகொள்ளாத அறையிருப்பின் தொட்டில் கூட வேண்டியதில்லை பழைய ஹார்லிக்ஸ் கண்ணாடி புட்டி போதுமானது “மீனாகி என்ன செய்ய போகிறாய்?” வெறிச்சோடி சுவற்றை பார்த்துக்கொண்டிருப்பேன் சலித்துப்போனால் தொட்டில் கண்ணடி தனில் எனது உருவ பிரதிபலிப்பை ரசித்தப்படியே வாயில் குமிழிகள் ஊற்றெடுக்க எனக்கு நானே பேசிக்கொண்டிருப்பேன் “எப்போது தூங்குவாய்?” என் இமை மூடும் போது.
-ஹக
i want to be a fish,
swimming in the deep without anyone knowing.
a tank fish is fine.
if the house has a room no one notices,
even a tank is unnecessary —
an old horlicks glass bottle
will do.
'what will you do as a fish?'
i will stare blankly at the wall.
if i get bored,
i will admire my own reflection
in the glass of the tank
and talk to myself,
bubbles rising from my mouth.
'when will you sleep?'
when my eyelids close.
— haka