← கவிதைகள் · poems
போட்டி
contest
மற்றொருவர் அழைக்க வேண்டுமென்பது
அன்பை நிரூபிப்பதற்கான சடங்கா ?
இருவரும் காத்திருந்து
நாளின் முடிவில் சோர்வடைந்து
மற்றவரின்
குரல் மறந்துவிடுமென வெருவி
கேட்டே விடுகின்றோம்
”ஏன் இன்று எனக்கு நீ அழைப்பு விடுக்கவில்லை ?”
கேட்ட நொடியிலே
எவ்வித ஊடலுமின்றி சமாதானம்
எட்டப்படுகிறது
தன்னை மறக்கவில்லை
என அறியதான் எத்தனை சாகசங்கள் ?
-ஹக
is waiting for the other to call first
a ritual to prove love?
both waiting,
tiring by the end of the day,
fearful that the other's voice
might fade from memory —
we give in and ask:
'why didn't you call me today?'
and in that very moment of asking,
peace is reached
without any quarrel at all.
how many heroics
just to know
you haven't been forgotten?
— haka