← கவிதைகள் · poems
நிலவற்ற இரவு
moonless night
பரந்த பூமியோ ஒளியேற்றப்படாத அறுபது சதுரடி அறையோ வித்தியாசமில்லை நிலவற்ற இரவில்.
நேற்றிரவு அவானா கடற்கரையில் நடந்துக்கொண்டிருந்தேன் இன்று ஃபிஜி மலையை ஏறிக்கொண்டிருக்கிறேன் நாளை கிராண்ட் கான்யனை சுற்றி சின்ன ஒரு நடைபயணம் திட்டமிட்டிருக்கிறேன்.
-ஹக
a vast open earth
or an unlit sixty square foot room —
there is no difference
on a moonless night.
last night
i was walking along the havana shoreline.
today
i am climbing the mountains of fiji.
tomorrow
i have planned a small trek
around the grand canyon.
— haka