← கவிதைகள் · poems
நடைமேடை
platform
வெகு நாட்கள் ஆகிவிட்டன, சற்று நேரத்தில் பார்த்துவிடுவேன் குளிரை விரட்டும் இளவெயிலென சோம்பலை துரத்தி மனதை பரபரப்புக்குள் ஆழ்த்துகிறது தூரத்தில் பிளிறும் இரயில்.
உனது இரயில் பெட்டி எங்கே வருமென தோராயமாக ஊகித்து நிற்கிறேன் இரயில் நிற்கும் முன்னே பொறுமையிழந்து கைப்பேசியெடுத்து உனக்கு அழைப்பு விடுக்கிறேன்.
ஏன் இவ்வளவு கலவர மகிழ்ச்சி? உன்னை எதிர்ப்பார்த்தா? உன்னுடன் வரும் என்னை எதிர்ப்பார்த்தா?
-ஹக
it has been so long —
i'll see you in a little while, i tell myself.
like morning sun chasing away cold,
the distant horn of the train
banishes my laziness and pulls my mind into flutter.
i stand guessing
which coach you might step out from.
before the train even stops,
i lose patience —
pick up my phone
and call you.
why this turbulent joy?
is it you i'm waiting for?
or the version of me
that only shows up
when you're around?
— haka