← கவிதைகள் · poems

இறந்த ஒளி

dead light

நட்சத்திரங்கள் எவ்வளவு உயிர்ப்புடன் இருக்கின்றதென நீ வானை காட்டுகிறாய் உயிர்ப்புடன் இருந்தன என திருத்துகிறேன்

ஒரு நட்சத்திரமாக நான் இருந்திருக்கலாம் பல பில்லியன் ஆண்டு முன்னே நான் இறந்திருப்பினும் வானில் உயிர்ப்புடன் மின்னிக்கொண்டிருப்பேன்.

சில மனிதர்களின் புன்னகை தொலை தூர நட்சத்திரங்களை நினைவுப்படுத்துகிறது உயிர்ப்புடன் இன்று கண்களுக்கு மின்னுவதாய் தோற்றமலிப்பதனால் அல்ல என்றோ அவை இறந்து இருண்டுவிட்டதால்.

-ஹக

you show me the sky, saying how alive the stars are. i correct you — were alive. i could have been a star. billions of years ago, even after my death, i would still be shining in the sky, alive to the eye. some people's smiles remind me of distant stars — not because they shine bright and alive today, but because they died and went dark long ago. - haka