← கவிதைகள் · poems
என் இடம்
my spot
நீ முன்பு பரிசளித்த செடியின் உள்ளே தேரையொன்று வெகு நாட்களாய் சிறு சலனமுமின்றி உட்கார்ந்திருந்தது முதல் மாடி வரை படிகள் ஒவ்வொன்றாய் தாவி வந்ததென்றால் உன்னால் நம்ப முடிகிறதா? நீரூற்றினாலும் அசையவில்லை நகர்த்தி தள்ளினாலும் போவதாயில்லை
அடர்ந்து விரிந்த இலைகளின் நிழலில் அது மறைந்திருந்த காரணம் என்னவாய் இருக்கும்? அரசியல்வாதிக்கு எதிராய் ஏதேனும் எழுதியிருக்குமோ? நகரில் முக்கிய கொலைகளில் ஈடுபட்ட கொலையாளியாக இருக்குமோ? மன அமைதிக்கான யாத்திரையில் இது பிரதான தளமோ? ஆசை துறந்து மக்கிப் போக ஆயுத்தமாகிறதோ?
எது எப்படியோ இப்போது காணாமல் போய்விட்டது அதனால்.. எனக்கு என் இடம் மறுபடியும் கிடைத்துவிட்டது சிறு வேண்டுக்கோள் - அடுத்த முறை மரமாக பரிசளித்தால் கீழே உட்கார வசதியாய் இருக்கும்..
-ஹக
inside the plant you once gifted me,
a frog had been sitting for many days
without the slightest stir.
did it climb the stairs one by one
all the way to the first floor?
can you believe that?
even when i watered it, it didn't move.
even when i nudged it, it wouldn't leave.
why was it hiding
in the shadow of those dense, spreading leaves?
had it written something against a politician?
was it a killer behind the city's notable murders?
or was this plant its sacred site
on a pilgrimage to inner peace?
was it preparing to rot here,
having renounced all desire?
whatever the reason —
it has disappeared now.
and so,
i have my spot back.
one small request —
if you gift me a tree next time,
it would be nice to sit under it.
— haka