← கவிதைகள் · poems
அவளது குரல்
her voice
அவளது குரல் என்னிடம் அவதிப்படும் என்னை மீட்டு மென் கரங்காளால் அரவணைத்துக்கொள்கிறது அதற்கு மனதை நிர்வாணமாக்கி ஒளிவு மறைவின்றி பதிலை பெறும் தந்திரம் தெரியும்
பிரபஞ்சத்தின் பிரகாசமான வெளிச்சத்தின் ஒலியது அலை மனதை அமைதியாக்கி பல வண்ண சித்திரம் வரையும்.
-ஹக
her voice rescues the part of me
that suffers inside me
and holds it gently.
it knows the trick
of stripping the mind bare
and drawing out an answer
with nothing hidden.
it is the sound of the universe's brightest light —
it stills the restless mind
and paints with many colours.
— haka