← கவிதைகள் · poems
அரிக்கும் அலை
the eroding wave
அரிக்கும் அலை. [குட்டி கதை]
மொளனமாய் வீற்றிருக்கும் கரையிடம் அரவணைக்கும் அலை “இன்னும் எத்தனை யுகங்கள் அமைதியாய் இருக்க உத்தேசம் ? இந்த முறையாவது சொல்லலாமே…” என கேட்டது “எதை?” “உன் காதலை” “ஹாஹா. நான் உன்னை காதலிக்கிறேனென எப்படி சொல்கிறாய்?” “ஒவ்வொரு முறை நான் உன்னை விட்டு விலகும் போதும் கரைகிறாயே?” அமைதியானது கரை மீண்டும் கேட்டது அலை “எப்போது சொல்வாய்?” “சொல்வேன். நீ என்னை இப்படி கேட்டே “அரிப்பதை” எப்போது நிறுத்துகிறாயோ அப்போது”.
the wave that embraces the shore
asked the shore sitting in silence —
'how many more ages do you plan to stay quiet?
you could say it this time at least...'
'say what?'
'that you love me.'
'haha. how can you say i love you?'
'because every time i pull away from you, you erode.'
the shore went quiet.
the wave asked again — 'when will you say it?'
'i will. when you stop eroding me by asking like this.'
— haka